வரலாற்றில் இன்று(05.01.2020)…உலக பறவைகள் தினம்…

வரலாற்றில் இன்று(05.01.2020)…உலக பறவைகள் தினம்…

வரலாற்றில் இன்று(05.01.2020)…உலக பறவைகள் தினம்

இன்று உலக மக்கள் அனைவராலும் பறவைகள் தினம் கொண்டாடப் படுகிறது. மனிதர்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளால் அழிந்து வருகின்ற பறவைகளின் இனங்களை பாதுகாக்கக் கூடிய நோக்கத்தோடு ஆண்டுத் தோறும் ஜனவரி 5 ஆம் தேதி உலக பறவைகள் தினம் ஆக கொண்டாடப்படுகிறது.

இயற்கை வளம் மற்றும் காடுகளை அழித்தல் மேலும்  இறைச்சிக்காக பறவைகளை வேட்டையாடு படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் பறவை இனங்கள் அழிக்கப்பட்டு வருகின்ற அவலநிலை நிகழ்கிறது.

Image result for உலக பறவைகள் தினம்

இது மட்டுமல்லாமல் பறவை இனங்களை வீட்டுகளில் கூண்டில் வைத்து அடைத்து அதனை வளர்ப்பது இயற்கைக்கு புறம்பான செயலாகும்.மண் வளத்தை  அடியோடு அழிக்கும் விதமாக விளைநிலங்களில் எல்லாம் அளவுக்கு அதிகமாக ரசாயனங்களை பயன்படுத்துவதால் 12 % பறவைகள் தற்போது அழிவின் விளிம்பில் ஊசல் ஆடிக் கொண்டுக்கிறது என்று பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.பறவைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சுயமாகவே பொதுமக்களிடம்  ஏற்பட வேண்டும் இல்லை என்றால் ஏற்படுத்த வேண்டும் இதுவே இப்பறவைகள் தினத்தின் முக்கிய நோக்கமாகும்

அழிவின் விளிம்பில் பறவைகள் :

இந்தியாவில்  மட்டும் 1330 அரிய  வகையான பறவை இனங்களும்  தமிழகத்தில் 52 வகையான பறவை இனங்கள் மட்டுமே உள்ளது என்று தேசிய பறவைகள் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.   மேலும் பறவைகள் அழிந்து வருவது கடும் வேதனையை ஆக உள்ளது என்று இயற்கை ஆர்வலர்களும் வேதனை தெரிவித்துள்ளனார்.,மேலும் கோடைக்காலத்தில் காட்டூத்தீக்கும் கடலில் மக்களின் அலட்சியத்தால் வீசிஎரியும் கழிவுளை உண்டும் பறைவகள் அழிவது தொடர்கதையாகி வருகிறது.உலகிற்கு ஆக்ஸிசன்  காற்றை பெருமளவு அளித்து வந்த அமோசன் காடானது அன்மையில் தீயிக்கு இரையாகியது அக்காட்டில் வாழ்ந்து வந்த அரிவகை விலங்கள் மற்றும் பறவை இனங்கள் கொத்து கொத்தாக கருகி கண்களை கலங்க வைத்தது.இயற்கை தந்த கொடையான காற்றை பாக்கெட் போட்டு சுவாசிக்கிறோம் கொடுமை அல்லவா..!இந்த அவலத்திற்கு மத்தியில் பறவை இனங்களும் தற்போது அழிந்து வருவதை நம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

Related image

பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் பறவைகள்

ஜப்பாந் நாட்டின் வட ஹகாய்டோ என்ற பகுதிகளில் அதிவேகமாக பரவிய பறவைக் காய்ச்சலுக்கு மட்டும் சுமார் 2,10,000 பறவைகள் அழிக்கப்பட்டன.இந்த கொடூரத்திற்கு முன்னர் அதே ஜப்பானில்  நில்காட்டா என்கின்ற நகரத்தில் மட்டும் சும்மர்  5,50,000 கோழிகள் மற்றும் தெற்கு ஹோக்கியோடாவில் சுமார் 23,000 வாத்துகளும் அழித்கப்பட்டது.இதே போல் நெதர்லாந்து நாட்டிலும் பறவை காய்ச்சல் காரணமாக சுமார் 2 லட்சம் வாத்துகள் அழிக்கப்பட்டன.

Related image

இதற்கு இந்தியா மட்டும் என்ன விதிவிலக்கா இந்தியாவிலும் பறவை காய்ச்சல் அதிகளவில் பரவிய காலக்கட்டத்தில் பறவைகள் உயிரிழப்பு அதிகமாகவே இருந்துள்ளது. நமது நாட்டின் தேசிய பறவையாகத் திகழும் மயில் விவசாய நிலங்களை சேதப்படுத்துகிறது என்று  மருந்து வைத்து மக்கள் கொல்லும் அவலமும் நடந்து வருகிறது. இது போன்று மயில்கள் அனைத்தும் மருந்து வைத்து கொல்லப்பட்டு வருவதால் தேசிய பறவையான மயில் அழிவின் விளிம்பில் உள்ளது.இவைகள் மட்டுமல்லாமல் அவ்வபோது சேதங்களை விளைவிக்கு புயல்களாலும் பறவைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இந்த புயல் ஆனது பல்லாயிரக்கணக்கான மரங்களை வேரோடு சாய்க்கின்றன. பெரும்பாண்மையான பறவை  இனங்கள் மரத்தில் கூடுகட்டி இன்பமாக வாழ்பவை  தன்னிச்சையாக அலைந்து திரிந்து தேடிய இறையை மகிழ்ச்சியோடு உண்ணுகின்ற பறவைகளை செல்ல பிராணி என்ற பெயரில் வீட்டில் அடைத்து வைத்து வளர்ப்பு என்று கொடுமைப் படுத்துகின்றனர் என பறவைகள் ஆய்வலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். பறவை மறைமுகமாக மரங்களை வளர்க்கின்ற அற்புதமான ஒரு வேலையை செய்யும் உயிரினம்,பறவை  தான் உண்கின்ற பழத்தின் விதைகளை எல்லாம் எச்சமாக வேறு இடத்தில் போடுகின்றன. இதனால், மரங்கள் வளர்வதற்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருக்கின்றது.

Related image

சீட்டுக்குருவிகள் எல்லாம் அழிந்து கொண்டு வருகின்றது.அவற்றை பேணி பாதுகாப்பது நாம் ஒவ்வொருவரின் கடமையாகும்.வருகின்ற கோடைகாலத்தில் அதிக வறட்சி மற்றும் வெப்பம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே பறவை இனங்களைப் பாதுகாக்க வீடுகளின் முன்போ அல்லது நம்முடைய வீட்டு மொட்டை மாடியிலோ கொஞ்சம் நீர் வையுங்கள். நீங்கள் அளிக்கும் ஒரு துளி நீர் கூட ஒரு பறவையின் உயிரைக் காக்கலாம்.

பறவை இல்லையேல் மரம் இல்லை!

மரம் இல்லையேல் மழை இல்லை

மழை இல்லையேல் மனித குலம் படும்பாடு பெரும்பாடு!!!

ஆகவே பறவைகளை பாதுகாப்போம் அனைவரிடமும்  பறவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நமது தலையாயக் கடமை.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube