ஒரு வீடு 82 ரூபாய்க்கு ?வீடுவாங்க ரெடியா ?புதிய முயற்சியில் இத்தாலி ….

ஒரு வீட்டை 82க்கு விற்பனை செய்யும் முடிவை , இத்தாலி அரசு  மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் சார்டினியா தீவில் பார்பாகியா மலைப்பகுதியை ஒட்டிய இடத்தில் அமைந்துள்ளது ஓலோலாய் கிராமம். அழகிய இந்த கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக வசிக்கும் மக்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால், 1300 பேர் மட்டுமே தற்போது இங்கு வசித்து வருகிறார்கள். அதோடு குழந்தை பிறப்பும் கணிசமாக குறைந்துவிட்டது. அங்கு இருப்பவர்களும் நடுத்தர வயதை சேர்ந்தவர்கள். பெரும்பாலானவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால், பலர் தொடர்ந்து ஓலோலாய் கிராமத்தை விட்டு வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஓலோலாய் மேயர், மக்கள் தொகை குறைவதை தடுக்க அதிரடியாக 2015ல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பொதுமக்கள் வெளியேறியதால் பாழடைந்து பூட்டியே கிடக்கும் 200 வீடுகளை இத்தாலி மதிப்பில் 90 பென்ஸ், அதாவது நமது பண மதிப்பிற்கு 82க்கு விற்பனை செய்யும் அறிவிப்பை வெளியிட்டார். இந்த வீடுகளை வாங்கும் நபர்கள் 3 ஆண்டுகளுக்குள் அதை சரி செய்து குடியேற வேண்டும். அதற்கு 24 லட்சம் வரை செலவழிக்க வேண்டும். இந்த வீடுகளை 5 ஆண்டுகளுக்கு பின் யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம்.

உலகம் முழுவதும் இருந்தும் 120 விண்ணப்பங்கள் 2017 இறுதிவரை வந்துள்ளன. இது பற்றி ஓலோலாய் மேயர் எபிசோ அர்போ கூறுகையில், ‘‘ஓலோலாய் கிராமத்தின் பாரம்பரியத்தை காப்பாற்றுவதே எனது முதல் வேலை. கடந்த காலத்தை போல் இங்கு மக்கள் பெருக்கத்தை அதிகரிக்க வேண்டும். எங்கள் நகரம் சாவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதற்காக இங்கு வசிக்கும் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். மீண்டும் வலிமைமிக்க கிராமத்தை கட்டமைப்போம்’ என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment