தோனியின் கஷ்டத்தை அப்போதுதான் உணர்ந்தேன்.!

தோனியின் கஷ்டத்தை அப்போதுதான் உணர்ந்தேன் என்று விராட் கோலி கூறியுள்ளார்.

By bala | Published: Jul 30, 2020 12:35 PM

தோனியின் கஷ்டத்தை அப்போதுதான் உணர்ந்தேன் என்று விராட் கோலி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் வீடியோ காலில் பேசிய போது விராட் கோலி சில சிறப்பான தகவலை கூறியுள்ளார்.

விராட் கோலி கூறியது "அப்போது தோனியின் கஷ்டத்தை தான் உணர்ந்ததாகவும், கடந்த 2015 வங்கதேச ஒருநாள் தொடரின் இடையே இரண்டு ஓவர்களுக்கு மட்டும் தோனி ஓய்வு எடுக்க சென்றார், அப்பொழுது விக்கெட் கீப்பிங் பணியை நான் செய்தேன் .

மேலும் விக்கெட் கீப்பிங் பணியை செய்யும் போது ஒவ்வொரு பந்தின் மீதும் அதிகாகமாக கவனம் செலுத்த வேண்டும், மேலும் அதே சமயம் பீல்டிங்கையும் மாற்ற வேண்டும் அந்த சமயம் நான் மிகவும் கடினமாக உணர்ந்தேன், அப்போதுதான் தோனி கஷ்டத்தை உணர்ந்தேன் என்றும் கூறியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc