இந்திய விமானப்படை நேற்று இரவு பிரம்மாண்ட பயிற்சி ஈடுபட்டதாக தகவல் வெளியானது !!!

  • இந்த ஒத்திகைப் பயிற்சியில் பெரிய எண்ணிக்கையில் போர் விமானங்கள் ஈடுபட்டன.
  • பாலக்கோட்டில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க முகாம் மீது இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்திய  பிறகு இந்திய விமானப்படை தயார் நிலையில் இருக்கின்றனர்.

இந்திய விமானப்படை  நேற்று இரவு பஞ்சாப் மற்றும் ஜம்முவை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் மிகப்பெரிய தயார் நிலை ஒத்திகையில்  ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஒத்திகைப் பயிற்சியில் பெரிய எண்ணிக்கையில் போர் விமானங்கள் ஈடுபட்டன.

இந்த பயிற்சியில் அதிக வேகத்தில் விமானங்கள் பறந்து சென்று பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தால் பதிலடி கொடுப்பதற்காக  இந்த பிரம்மாண்ட பயிற்சி நடைபெற்றதாக தெரிகிறது.
பாலக்கோட்டில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க முகாம் மீது இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்திய  பிறகு இந்திய விமானப்படை தயார் நிலையில் இருக்கின்றனர்.