கங்குலி ஓய்வு பெற்ற பிறகுதான் எனக்கு சான்ஸ் கிடைத்தது… யுவராஜ் சிங்.!

கங்குலி ஓய்வு பெற்ற பிறகுதான் தனக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்ததாக யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங்கை பிடிக்காதவர் யாரும் இருக்கமுடியாது, இவர் பல சாதனைகளையும் கையில் வைத் திருக்கிறார், குறிப்பாக யுவராஜ் சிங் என்று கூறினால் இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த 6பந்துகளில் 6 சிக்ஸர்கள் தான், இந்த சாதனையை எந்த ஒரு இந்தியன் கிரிக்கெட் வீரர்களும் அந்த சாதனையை முறியடிக்கவில்லை என்றே கூறலாம்.

மேலும் யுவராஜ் சிங் ஆனாலும், டெஸ்ட் போட்டிகளில் அவரால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. மேலும் டெஸ்ட் போட்டியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளும் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் யுவராஜ் சிங் கடைசி சில ஆண்டுகள் மோசமாக அமைந்தது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய யுவராஜ் சிங் தனக்கு டெஸ்ட் போட்டிகளில் போதிய வாய்ப்பு கிடைக்காததை பற்றி சிலவற்றை கூறியுள்ளார், நான் இப்போது திரும்பிப் பார்த்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் அதிக வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்று நான் நினைக்கிறன் மேலும் அப்போது ராகுல் டிராவிட், சேவாக்,  சச்சின், விவிஎஸ் லக்ஷ்மன், சவுரவ் கங்குலி போன்ற பெரிய வீரர்களுக்கு மத்தியில் வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம்.

மேலும் எனக்கு டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு சவுரவ் ஓய்வு பெற்ற பின் தான் வந்தது. மேலும் ஆனால் அப்பொழுதுதான் எனக்கு புற்றுநோய் ஏற்பட்டது , மேலும் அதன் பிறகு என் வாழ்கை வேறு மாதிரி திசை திரும்பி விட்டது என்றும் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.