தல அஜித்துடன் நடிக்காதது வருத்தம் அளிக்கிறது! வருத்தம் தெரிவித்த சிரிப்பழகி சினேகாவின் கணவர்!

தல அஜித்துடன் நடிக்காதது வருத்தம் அளிக்கிறது! வருத்தம் தெரிவித்த சிரிப்பழகி சினேகாவின் கணவர்!

  • நடிகர் பிரசன்னா வெளியிட்டுள்ள அறிக்கை. 
  • தல அஜித்துடன் நடிக்காதது வருத்தம் அளிக்கிறது.
சமீபத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான  திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.   நடிகர் அஜித் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின்  தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இந்த படத்தில் சிரிப்பழகி சினேகாவின் கணவரான நடிகர் பிரசன்னா முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து நடிகர் பிரசன்னா அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் "வலிமை படத்தில் அஜித்துடன் நான் நடிக்க வேண்டும் என்று பலரும் விரும்பி எனக்கு வாழ்த்து சொன்னீர்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்ததும் உண்மைதான். என்னுடைய திரைவாழ்க்கையில் மிகப்பெரிய அறிவிப்பாக இச்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் துரதிருஷ்ட வசமாக அந்த வாய்ப்பு எனக்கு இந்தமுறை கிடைக்கவில்லை. விரைவில் தல அஜித்துடன் இணைந்து நடிப்பேன் என்று நம்புகிறேன் என்றும், அஜித்துடன் நடிக்க முடியாதது எனக்கு மிகுந்த கவலையளித்தாலும் உங்களுடைய அன்பால் இதிலிருந்து மீண்டு விட்டேன்.” என்றும் கூறியுள்ளார்.

Latest Posts

வந்தே பாரத் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான புதிய டெண்டர் அறிவிப்பு..! 
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!
பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!
உமர் காலித் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது..!
நவம்பர் 1-ஆம் தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகளை தொடங்க அனுமதி !
கொஞ்சம் பொறுமையா இருங்க... பெரிய அப்டேட் வருது...கார்த்திகேயா கும்மகொண்டா..!
போக்குவரத்துக்கு விதி மீறல்கள் - வளைகுடா அரசு அறிவித்துள்ள புதிய அபராதம்!
சீன அதிபரை விமர்சித்த கோடீஸ்வரருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை.!
கொரோனா அதிகரிப்பை அடுத்து ஜெய்ப்பூர் மற்றும் ராய்பூரில் புதிய கட்டுப்பாடுகள்!
டெல்லியில் 13 நாட்கள் கழித்து லேசான மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்