காஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி

காஷ்மீர் உள்ள  நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக  ராகுல் காந்தி  உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகர்  சென்றனர். ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தி.மு.க எம்.பி. திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தினேஷ் திரிவேதி உள்ளிட்டோர் சென்றனர்.ஆனால்  ஸ்ரீநகரில் இருந்து அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பிவைக்கபட்டனர்.

இதன் பின்னர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஆளுநர் அழைப்பின் பெயரிலேயே காஷ்மீர் சென்றோம் .காஷ்மீரில் நிலவும் நிலையை பார்ப்பதற்காக ஸ்ரீநகர் சென்றோம், துரதிருஷ்டவசமாக எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.நாங்கள் அழைத்துச்சென்ற ஊடக நண்பர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவையெல்லாம் பார்க்கும் போது காஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது என்று தெரிவித்தார்.