விண்ணில் ஏவப்படும் சந்திராயன் -2 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராயும்-இஸ்ரோ தலைவர் சிவன்

ஜூலை 15 ம் தேதி அதிகாலை 2 மணி 15 நிமிடத்தில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  சதிஷ் தவான் ஏவுகணை மையத்தில் இருந்து  ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது சந்திராயன் 2.

இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ஜூலை 15ல் விண்ணில் ஏவப்படும் சந்திராயன் -2 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராயும் .விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2022க்குள் நிறைவேற்றப்பட உள்ளது என்று தெரிவித்தார்.