உஷார்! சமுக வலைத்தளத்தில் அனுப்பப்படும் தகவல்களை கண்காணிக்கும் அதிகாரம் மத்திய அரசிற்கு இருக்கிறது!

நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சியினர் சார்பாக சமூக வலைத்தளங்களான

By manikandan | Published: Nov 20, 2019 11:28 AM

நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சியினர் சார்பாக சமூக வலைத்தளங்களான பேஸ்புக், மெசேஞ்சர், வாட்ஸாப் போன்ற தளங்களில் இருந்து அனுப்பப்படும் தகவல்களை மத்திய அரசு உளவு பார்க்கிறதா என கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு மத்திய அரசின் உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, ' பொதுமக்களின் நன்மைக்காக சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு மத்திய அரசானது டிஜிட்டல் தகவல்களை இடைமறிக்கவும், கண்காணிக்கவும் உரிமை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் குறியீட்டு மூலமாக தகவலை பரிமாறிக்கொண்டால், அதனையும் இடைமறித்து அதன் அர்த்தம் கண்டுகொள்ள அரசுக்கு உரிமை உள்ளாக்கவும் குறிப்பிட்டர். கணினிகளில் உருவாக்கி,சேமித்து வைக்கப்படும் தகவல்களையும் , அப்படி பரிமாறிக்கொள்ளும் தகவலக்கையும்  இடைமறித்து கண்காணிக்கும் உரிமை குறித்த சட்டம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த தகவல்களை இடைமறித்து ஆராய சில விசாரணை மற்றும் புலனாய்வு துறைகளுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது.  எனவும் இணை அமைச்சர் இஷான் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
Step2: Place in ads Display sections

unicc