பேட்டிங்கில் அதிரடி காட்டிய ஹைதராபாத்.. 220 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கவுள்ளது டெல்லி!

பேட்டிங்கில் அதிரடி காட்டிய ஹைதராபாத்.. 220 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கவுள்ளது டெல்லி!

“220” என்ற இமாலய இலக்குடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணி களமிறங்கவுள்ளது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் 47 ஆம் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் – விருத்திமன் சஹா களமிறங்கினார்கள்.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடிவந்தனர். பவர்பிலே ஓவரில் 70 ரன்களுக்கு மேல் குவிக்க, இவர்களின் விக்கெட்களை வீழ்த்துவோமா? என்ற கட்டத்தில் டெல்லி அணி திணறியது. டேவிட் வார்னர் 25 பந்துகளில் அரைசதம் விலாச, 66 ரன்களில் வார்னர் வெளியேறினார். அவரைதொடர்ந்து அதிரடியாக ஆடிவந்த விருத்திமன் சஹா, மரணமாக ஆடி 87ரன்களில் வெளியேறினார். அடுத்த மனிஷ் பண்டே – கேன் வில்லியம்சன் கூட்டணி களமிறங்க, இறுதியாக மனிஷ் பண்டே 44 ரன்கள் அடித்தார்.

20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்களை இழக்க, 219 ரன்கள் அடித்தது. 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது டெல்லி அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சை பொறுத்தளவில் நோர்ட்ஜ் மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

Join our channel google news Youtube