நமது முன்னோர்கள் பருவமடைந்த பெண்கள் பாவாடை தாவணியை அணிய சொன்னதின் காரணம் இதுதானா?

நமது முன்னோர்கள் பருவமடைந்த பெண்கள் பாவாடை தாவணியை அணிய சொன்னதின் காரணம் இதுதானா?

நமது முன்னோர்கள் பருவமடைந்த பெண்கள் பாவாடை தாவணியை அணிய சொன்னதின் காரணம்.

நமது முன்னோர்கள் சில விஷயங்களில் இப்படி  தான் நடந்துக் கொள்ள வேண்டும் என கட்டளை போடுவதுண்டு. ஆனால், அந்த கட்டளைக்கு பின் ஏதாவது ஒரு நன்மைக்கேதுவான வழிகள் தான் இருக்கும். இந்த பழக்கம் நமது ஆரோக்கியத்தை பேணி காப்பதுடன், பல நன்மை பயக்கும் வழிகளையும் உருவாக்குகிறது.

தற்போது இந்த பதிவில், நமது முன்னோர்கள் பருவமடைந்த பெண்கள் பாவாடை தாவணியை அணிய சொன்னதின் காரணம் என்ன என்பது பற்றி பார்ப்போம்.

அக்காலத்தில் நமது முன்னோர்கள் பருவமடைந்த பெண்களை தாவாணி பாவடை அணிய சொல்வதுண்டு. பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை கட்டினார்கள். இதற்கு காரணம் என்னவென்றால், பருவமடைந்ததில் இருந்து கர்ப்பப்பை உள்ள இடத்திலும், தொப்புளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும்.

இந்த காரணத்திற்காக தான் பாவாடை தாவாணி மற்றும் சேலை அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள். இவ்வாறு உடை அணிவதால் அந்த பகுதி அதிக உஷ்ணம் ஏற்படாமல் இருந்து கர்ப்பப்பையை காக்கும்.

ஆனால் இன்றைய உடைகள், கர்ப்பப்பை வெப்பம் அடைந்து, அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி கர்ப்பப்பை சம்பந்தமான பல பிரச்சனைகள் ஏற்பட வழி வகுக்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube