உங்கள் முடியின் நுனி பகுதி உடைந்து காணப்படுகிறதா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே கூந்தல் பிரச்னை தான். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமாக நாடுவது செயற்கையான மருத்துமுறைகள் மற்றும் கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை தான். ஆனால், இவற்றால் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது.

தற்போது, இந்த பதிவில் கூந்தல் நுனியில் ஏற்படக் கூடிய முறிவினை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.

புரோட்டின்

புரோட்டீன் சத்துக்கள் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதில் உள்ள சத்துக்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, கூந்தல் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. இனிப்பு மற்றும் பொரித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

நுனி முடி வெட்டுதல்

கூந்தல் நுனி வெடிப்பு பிரச்னை உள்ளவர்கள், நான்கு வாரத்திற்கு ஒருமுறை, கூந்தலின் நுனி முடியை வெட்டி விடுவதை வாழக்கமாக கொள்ள வேண்டும். இப்படி செய்வதால், இப்பிரச்சனை கட்டுப்படுத்த முடியும்.

கூந்தல் மசாஜ்

கூந்தலின் ஆரோக்கியத்திற்கு இரத்த ஓட்டம் மிகவும் அவசியமான ஒன்று. எனவே, வாரத்திற்கு ஒரு முறையாவது, கூந்தலை நன்கு மசாஜ் செய்து விட வேண்டும். எண்ணெய்ப்பசையுள்ள கூந்தலை உடையவர்கள், மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment