ஆரஞ்சு பழத்தை விட விதையில் இவ்வளவு சத்தா? இனி இதை தான் சாப்பிடணும்!

பழங்கள் என்றால் நாம் அனைவரும் அன்றாடம் விரும்பி உண்ணும் ஒரு உணவு தான். அதிலும்

By Rebekal | Published: Dec 21, 2019 10:45 AM

பழங்கள் என்றால் நாம் அனைவரும் அன்றாடம் விரும்பி உண்ணும் ஒரு உணவு தான். அதிலும் குறிப்பாக சில பழங்களை நமக்கு விருப்பமாக தேர்ந்தெடுத்து உண்பது அனைவருக்கும் வழக்கம். அதிலும் ஆரஞ்சு பழம் என்றால் பிடிக்காதவர்கள் இருக்கவா செய்வார்கள். இந்த பழத்தில் பல நன்மைகள் உள்ளது. சிலர் பழத்தின் நன்மை தீமை அறியாமலே உண்கிறார்கள். அனைத்து பழங்களிலும் பொதுவாகவே ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் சாது நிறைந்து காணப்படும். அதிலும் ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளது, இதனால்  உடலில் பிரீ ராடிக்கல் செல் அழிவு மற்றும் ஆக்ஸிடேஷன் ஏற்படாமல் காப்பதோடு மட்டுமல்லாமல், உங்களை இளமையாக வைக்க உதவும். ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். இந்த பழத்திலுள்ள அதிக அளவு நார்சத்து உங்கள் இரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரையினை குறைக்க உதவுகின்றது.பழத்தில் மட்டுமல்ல இதன் விதையிலும் அளவற்ற சத்துக்கள் உள்ளது.

விதையின் நன்மைகள்:

ஆரஞ்சு பழத்தில் விதைகளில் சிறந்த மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உள்ளன. எனவே, இதனை சாப்பிடுவதால் புத்துணர்ச்சி அளிக்கிறது. இந்த விதைகள் உடல் சோர்வை போக்கி சுறுசுறுப்பாக இருக்க உதவும் .மேலும் இந்த விதைகளை கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய் முடிக்கு ஒரு சிறந்த கண்டிஷனராக செயல்படும் .மேலும் முடியின் வலிமையை அதிகரிப்பதோடு, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது . இது தலையில் ரத்த ஓட்டம் சீராக செயல்படவும் உதவுகிறது . மேலும், இந்த விதையில், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமுள்ளதால் உடலில்  நச்சுத்தன்மையை சரி செய்கிறது.
Step2: Place in ads Display sections

unicc