பள்ளிக் கல்வித்துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையோ ? ஸ்டாலின் கேள்வி

மாணவர்கள் பொங்கல் தினத்தன்று பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை

By venu | Published: Dec 28, 2019 03:18 PM

  • மாணவர்கள் பொங்கல் தினத்தன்று பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. 
  • பள்ளிக் கல்வித்துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையோ ? என்று  ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 
ஜனவரி 16-ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். அந்த உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.இதனால் அன்று 9-12 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ,பிரதமர் மோடியின் உரையைக் கேட்க 16-01-2020 அன்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடுவதா? உடனே திரும்பப்பெறாவிட்டால் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் பின்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட தகவலில்,ஜனவரி 16-ஆம் தேதி பிரதமர் மோடியின் உரையை எங்கிருந்து வேண்டுமானாலும் கேட்கலாம். பொங்கல் விடுமுறை ரத்து இல்லை .அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்படவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில் , பிரதமர் உரை கேட்க மாணவர்கள் மாட்டுப் பொங்கலன்று பள்ளிக்கு வருமாறு உத்தரவிடவில்லை என, கடும் எதிர்ப்பு எழுந்த பிறகு, முதல்வரும், அமைச்சரும் தெரிவித்துள்ளனர். அப்படி எனில், மாணவர்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும் என அறிவுரையாக கூட இன்றி, ஏன் செயல்முறை ஆணையாக நேற்று வெளியிட வேண்டும்? முதல்வரும், அமைச்சரும் தரும் பதிலைப் பார்த்தால் பள்ளிக் கல்வித்துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையோ என்ற சந்தேகமே எழுகிறது! எனவே, இந்த விவகாரத்தில் வெறும் மறுப்பையும், மழுப்பலையும் விட்டுவிட்டு முறையான அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc