நீங்கள் உபயோகிக்கும் சானிடைசர் போலியானதா? ஒரிஜினலா? வீட்டிலேயே ஆய்வு செய்யலாம்!

உலகம் முழுவதிலும் கடந்த பத்து மாதத்திற்கு மேலாக வாட்டி வதைத்து வரக்கூடிய பெரும் தொற்று என்றால் அது கொரோனா வைரஸ் தான். இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகெங்கிலும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கில் உயிரிழந்துள்ள நிலையில் சாதாரணமாக நாம் வெளியில் செல்லும்போது நமக்கு மிகவும் முக்கியமானது என்றால் முதலில் கை குட்டை, மழை நேரத்தில் குடை என எடுத்துக் கொள்வது போல தற்பொழுது கடந்த சில மாதங்களாகவே நாம் வெளியில் செல்லும்பொழுது நமக்கு தேவை கைகளை சுத்திகரிப்பதற்கு ஒரு சானிடைசர் என்று ஆகிவிட்டது. முகக்கவசம் சனிடைசர் தான் நம்முடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாக இப்போது மாறியுள்ள நிலையில் நாம் உபயோகிக்கக்கூடிய சனிடைசர் உண்மையானது தானா அல்லது போலி நிறுவனங்களின் தயாரிப்பா என்பது பற்றி நாம் எவ்வாறு அறிந்துகொள்வது. ஈஸியான முறையில் வீட்டிலேயே ஆய்வு செய்து பார்க்கலாம். எவ்வாறு என்று பார்க்கலாம் வாருங்கள்.

டிஷ்யூ சோதனை

முதலில் ஒரு சாதாரண டிஷ்யூ பேப்பரை எடுத்துக் கொண்டு அதில் பால் பாயின்ட் பென் வைத்து ஒரு சிறிய வட்டத்தை வரைந்து கொள்ளவும். பின் நாம் உபயோகிக்கக் கூடிய சானிடைசரில் 2 துளி விட்டு அது அந்த வட்டத்தைத் தாண்டி பரவும் வரை காத்திருக்கவும். அந்த வட்டத்தைத் தாண்டி சானிடைசர் பரவியதும் பால் பாயிண்ட்பென்னின் மை கரைகிறது என்றால் அதில் போதுமான அளவு ஆல்கஹால் உள்ளது என அர்த்தம். அவ்வாறு கரையாமல் அது கோட்டை கடந்து பரவிச் என்றும் அந் கோடு அப்படியே நீல நிறமாக இருந்தால் நாம் உபயோகிக்கக் கூடிய சனிடைசர் ஒரிஜினல் கிடையாது. இதன் மூலம் கிருமிகள் அழியாது பாதுகாப்பும் கிடையாது. இது போல இன்னொரு சோதனையும் செய்யலாம்.

கோதுமை சோதனை

அதாவது ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு கரண்டி கோதுமை மாவை எடுத்து அதில் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி சானிடைசர் சேர்க்க வேண்டும். பின் அவற்றை நன்றாக பிசைந்து மாவை தயாரிக்க முயற்சிக்கும் பொழுது மாவு ஒழுங்காக வராமல் தனியாக கரைந்து அல்லது உருப்பெறாமல் இருந்தால் நாம் உபயோகிக்கக் கூடியது போலியானது. அப்படி இல்லாமல் சாதாரணமாக உள்ளது போல மாவு பசை தன்மையுடன் காணப்பட்டால் அது ஒரிஜினல் சனிடைசர்.
author avatar
Rebekal