ரம்புட்டான் பழத்தால் உயிருக்கு ஆபத்தா? இலங்கை மக்கள்!

ரம்புட்டான் பழத்தால் உயிருக்கு ஆபத்தா? இலங்கை மக்கள்!

இலங்கை கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகளவில் பரவுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், அந்த பகுதியில் காணப்படும் கழிக்கப்பட்ட ரம்புட்டான் தோள்களே, இந்த நோய்க்கும் காரணம் எனவும் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர். அங்குள்ள மக்கள் ரம்புட்டான் பழங்களை சாப்பிட்டுவிட்டு தோள்களை ஆங்காங்கே எறிந்துவிடுகின்றனர். மழைக்காலங்களில், இந்த தோள்களில் நீர் தேங்கி அந்த நீரில் டெங்கு கொசுக்கள் முட்டையிடுவதாக குறிப்பிடப்படுகிறது. இதன் காரணமாக இந்த வருடத்தில் மட்டும் 32 பேர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர். அதனால், ரம்புட்டான் தோள்களை உரியமுறையில் சேகரித்து, சுத்தமாக சூழலை பராமரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.