ஆரஞ்சு பழத்தினால் இவ்வளவு நன்மையா.?

ஆரஞ்சு பழத்தினால் இவ்வளவு நன்மையா.?

நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில் ஏராளமான ஆரோக்கியம் மற்றும் நன்மைகள் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து, விட்டமின் சி, தையமின் பொட்டாசியம் ,விட்டமின் எ , கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது.

ஆரஞ்சு பழம் பல நோய்களுக்கு மருந்தாகவும் காணப்படுகிறது. ஆரஞ்சு பழம் அல்சர் போன்ற நோய்களுக்கு நிவாரணியாக பயன்படுகிறது.

நன்மைகள்:

ஆரஞ்சில் உள்ள மெக்னீசியம் இரத்த நாளங்களை விரிவடைய செய்து ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது.

ஆரஞ்சு பழம் அடிக்கடி சாப்பிட்டு ஒரு வருபவர்களுக்கு உடலில் இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதைத் தடுத்து மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

அல்சரினால் குடலில் ஏற்படும் பாதிப்பை தடுத்து செரிமான மண்டலத்தை சரிசெய்கிறது.தொடர்ந்து ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீரக கற்களை கரைத்துவிடும்.

ஆரஞ்சு பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் இந்த பழங்களை சாப்பிட்டு வரும் போது உடலில் கால்சியம் சேர்மானத்தை அளவுடன் வைக்க உதவுகிறது.

author avatar
murugan
Join our channel google news Youtube