உங்கள் திருமணத்திற்கு முன்னாள் காதலரை/காதலியை அழைப்பது சரியான செயலா?

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பர்; இந்த திருமணத்தை ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் காதல் திருமணம், நிச்சயிக்கப்பட்ட திருமணம் என செய்து கொள்கின்றனர். இவற்றை தவிர காதலித்து, அதில் தோல்வியடைந்து பின் பெற்றோர் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை புரிந்து கொள்பவரும் உண்டு.

இந்த பதிப்பில் உங்கள் திருமணத்திற்கு முன்னாள் காதலரை/காதலியை அழைப்பது சரியான செயலா என்பது குறித்து படித்து அறியலாம்.

நன்கு சிந்தியுங்கள்

முன்னாள் காதலரை/காதலியை உங்கள் திருமணத்திற்கு அழைத்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என நன்கு யோசித்து, உயிர் நண்பர்களிடம் கலந்துரையாடி அவர்தம் ஆலோசனையையும் செவியுற்று சிந்தித்து முடிவெடுத்தல் அவசியம்.

முன்னாள் காதலி/காதலர்

முன்னாள் காதலர்/காதலியின் குணாதிசயங்களை பற்றி நன்கு ஆராய்ந்து பின் அழைத்தல் நல்லது; அவரின் குணாதிசயம் நட்புணர்வு கொண்டதா அல்லது பழிவாங்கும் தன்மை கொண்டதா என அலசி ஆராய்ந்து முடிவெடுத்து, பின்னர் அழைப்பு விடுக்கவும்.

துணையின் ஆலோசனை

உங்கள் வாழ்க்கைத்துணையாக வரப்போகும் நபர் உங்களை பற்றி அனைத்தும் அறிந்தவராக இருந்தால், அவரிடம் முன்னாள் காதலரை/காதலியை அழைப்பது குறித்து ஒருமுறை கலந்தாலோசித்து கொள்ளுங்கள்.

பின்விளைவுகள்

துணையிடம் கலந்தாலோசித்த பின், அவரின் விருப்பப்படி நடக்க முயற்சிக்கவும்; அதுவே நன்மை பயக்கும். ஏனெனில் நீங்கள் உங்களது முன்னாள் காதலுக்கு அழைப்பு விடுப்பது போல், துணையும் அவரின் துணையை அழைத்தால் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்று சிந்தித்து பார்த்துக் கொள்ளுங்கள்.

குடும்பம்..

நீங்கள் முன்னாள் காதலுக்கு விடுக்கும் அழைப்பு உங்கள் மற்றும் துணையின் குடும்பத்தாரிடையே எந்த ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தி விடாத வண்ணம் இருந்தால் மட்டுமே எடுத்த முடிவை செயல்படுத்தவும்.

author avatar
Soundarya

Leave a Comment