இவருக்கு அண்ணா விருதா? பொன்.மாணிக்கவேல் எதிர்ப்பு

ஏடிஎஸ்பி  இளங்கோவிற்கு  விருது வழங்கக்கூடாது என்று  பொன்.மாணிக்கவேல் எதிர்ப்பு

By venu | Published: Sep 15, 2019 07:05 PM

ஏடிஎஸ்பி  இளங்கோவிற்கு  விருது வழங்கக்கூடாது என்று  பொன்.மாணிக்கவேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சிலை கடத்தல் பிரிவு அதிகாரியாக இருந்தவர் பொன்.மாணிக்கவேல் .ஒய்வு பெற்ற இவர் நீதிமன்ற உத்தரவு மூலம் சிலை கடத்தல் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் பணியில் இருந்த காலத்தில் தமிழக கோவில்களில் காணாமல் போன ஏராளமான சிலைகள் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சிலைகள் காணாமல் போன வழக்குகள் விசாரணை நடந்து தொடர்ந்து வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு பொன்.மாணிக்கவேல் மீது உடன் பணியாற்றிய 13-க்கும் மேற்பட்ட போலீசார் டி.ஜி.பி. அலுவலகம் சென்று புகார் மனு அளித்தனர். இது தொடர்பாக ஏடிஎஸ்பி இளங்கோ கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில், சிலைக்கடத்தல் வழக்குகளை சுதந்திரமாக விசாரிக்க பொன்.மாணிக்கவேல் எங்களை விடவில்லை. சிலைக்கடத்தல் விவகாரத்தில் அழுத்தத்திற்கு மத்தியில் பணியாற்றினோம்.காணாமல்போன சிலைகள் பலவற்றை மீட்க முயற்சி எடுக்கவில்லை. ஆனால் கைதுசெய்ய நிர்பந்திக்கிறார் பொன் மாணிக்கவேல் தலைமையில் எங்களால் செயல்பட முடியாது என்று கூறினார். இந்த விவகாரம் நடத்த நாட்கள் பல ஆயினும் தற்போது மீண்டும் பொன்.மாணிக்கவேல் -இளங்கோ  இடையே உரசல் ஏற்பட்டுள்ளது.அதாவது பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணா விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த விருதில் ஏடிஎஸ்பி இளங்கோவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால் இளங்கோவிற்கு  விருது வழங்கக்கூடாது என்று  பொன்.மாணிக்கவேல்அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.பொன்.மாணிக்கவேல், இளங்கோவிற்கு விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc