அடுத்து இந்தியாவை குறி வைக்கும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு…. அந்த அமைப்பின் இணையத்தில் வெளியிட்ட தகவலால் அடுத்த அதிரடியில் இறங்குமா? இந்தியா….

இந்தியாவின் சொர்க்கமாக கருதப்படும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகளும் தீவிரவாதிகளும் அம்மாநிலத்தில் அமைதியை சீர்குலைத்து வருகின்றனர்.இந்நிலையில் ஜம்மு காஷ்மீர்  மாநிலம் சோபியான் பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.இந்த துப்பாக்கி சண்டையில்  பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார்.இந்த  துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

Image result for amaq news agency

இந்த துப்பாக்கி சூட்டை அடுத்து , ஐஎஸ் அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தது அது ஐஎஸ் அமைப்பின் செய்தி இணையதளமான Amaq News Agency -யில் இடம் பெற்றிருந்தது. அதில்,ஜம்மு காஷ்மீர் மாநிலம்  விலயாஹ் ஆஃப் ஹிண்ட்  என்ற பகுதியை ஐஎஸ் அமைப்பின்  புதிய மாகாணமாக  அறிவித்திருந்தது.இந்திய இராணுவத்தால்  சோபியானில் நடைபெற்ற என்கவுண்டரில்சுட்டு கொல்லப்பட்டவன் இஷ்ஃபக் அகமது சோபி என்று  ஐஎஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது இந்திய நாட்டை மட்டுமல்லாது அகில உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
Kaliraj

Leave a Comment