அமெரிக்கா விமான தளத்தின் மீது ஏவுகனை தாக்குதல்.. ஈரானின் பதிலடிகளால் உலக நாடுகள் பதற்றம்..

அமெரிக்கா விமான தளத்தின் மீது ஏவுகனை தாக்குதல்.. ஈரானின் பதிலடிகளால் உலக நாடுகள் பதற்றம்..

  • ஈரான் நாட்டின் உளவுத்துறை ராணுவ தளபதியாக இருந்த சுலைமானியை அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்கி கொன்றது.
  • இதன் காரணமாக ஈரான் அமெரிக்காவின் இராணுவ தளங்களை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தியது.

ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தின் அருகே கடந்த 3-ம் தேதி அமெரிக்க நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும்  ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் இறந்தனர்.

இதை தொடர்ந்து அமெரிக்காவை  கண்டிப்பாக பழி வாங்குவோம் என ஈரான் வெளிப்படையாகவே கூறியது. ஈரான் கடந்த 8ஆம் தேதி அதிகாலை ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் உள்ள ராணுவ தளத்தின் மீது  10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி  தாக்குதல் நடத்தியது. தாக்குதல்களில் குறைந்தது 80 அமெரிக்க வீரர்கள் இறந்து உள்ளதாக தகவல் வெளியானது.

அதனை தொடர்ந்து மீண்டும் ஈராக் விமானப்படை தளம் மீது, அமெரிக்க ராணுவத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் ராணுவம்  அமெரிக்க ராணுவத்தை குறி வைத்து, 4 ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏ.எப்.பி., நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை அமெரிக்கா தாக்குதல் நடத்தி கொன்றபின், இரு நாடுகளுக்கிடையே போர் அபாயம் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தங்கள் பகுதியைவிட்டு வெளியெறவேண்டும் என ஈரான் கோரிக்கையை முன்வைத்து வருகிறது.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube