சூப்பர் ஓவர் மூலம் அயர்லாந்து அணி ஆறுதல் வெற்றி..!

ஆப்கானிஸ்தான் , அயர்லாந்து அணிகளிடையில் மூன்று டி 20 போட்டி கொண்ட தொடரை கிரேட்டர்

By murugan | Published: Mar 11, 2020 11:38 AM

ஆப்கானிஸ்தான் , அயர்லாந்து அணிகளிடையில் மூன்று டி 20 போட்டி கொண்ட தொடரை கிரேட்டர் நொய்டா விளையாட்டு வளாக மைதானத்தில் விளையாடி வந்தனர்.

நேற்று நடந்த இறுதி போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 148 ரன் குவித்தது. பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில்  7 விக்கெட் இழந்து  148 ரன் எடுத்ததால் ஆட்டம்  சமனில் முடிய இதைத் தொடர்ந்து சூப்பர் ஓவர்நடைபெற்றது.

முதலில் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி  8 ரன் எடுத்து 1 விக்கெட் இழந்தனர். பின்ன இறங்கிய அயர்லாந்து அணிக்கு கடைசி பந்தில் 3 ரன் தேவைப்பட்ட போது கெவின் ஓ பிரையன் சிக்சர் விளாசி ஆறுதல் வெற்றி பெற்றது.

இந்நிலையில் டி20  தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கெவின் ஓ பிரையன் ஆட்ட நாயகன் விருதும், குர்பாஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

Step2: Place in ads Display sections

unicc