ஐஆர்சிடிசி(IRCTC) யும் ஓலா(OLA) யும் கூட்டு…!!!

 

ஐஆர்சிடிசி(IRCTC) வெப்சைட், மொபைல் ஆப்கள் மூலமாக இரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே எஸ்எம்எஸ் மூலமாக முன்பதிவு குறித்த விவரங்கள் வரும். ஆனால் ரயில் நிலையங்களில் நேரடியாக சென்று முன்பதிவு செய்பவர்களுக்கு சிஎன்எப் குறியீடு மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது என்பதால் இவர்களுக்கு படுக்கை எண், ரயில் பெட்டி எண் போன்றவை அனுப்பப்படமாட்டாது. இந்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் சென்று தான் விவரங்களை கேட்டறிய வேண்டும்.

இந்தியாவின் முன்னனி கால் டாக்ஸி நிறுவனமான ஓலா(OLA) தற்சமயம் ஐஆர்சிடிசி இணையதளத்துடன் இணைகிறது. அதன்படி ரயில்வே பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் 7 நாட்களுக்கு முன்பே ஓலா வாடகை வண்டிகளை புக்  செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஆப் பயன்படுகளில் ஓலா கால் டாக்ஸி புக் செய்ய முடியும் என்பதால் மக்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணி மூலம் ஓலா மைக்ரோ, ஓலா மினி, பிரைம் ப்ளே, ஓலா ஆட்டோ போன்ற சேவைகளை ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் மிக எளிமையாக புக் செய்ய முடியும்.

மேலும் இந்த சேவைகள் கடந்த திங்களன்று தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.. காருக்கோ, ஆட்டோவுக்கோ போன் செய்து விட்டு, வருதானு வழிமேல் விழி வைத்து பார்த்துக் கொண்டிருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. மொபைல் புரட்சியில் போன் போட்டு பேரம் பேசிக் கொண்டிருக்கலாம் நேரம் இல்லை. மொபைலில் ஆப் மற்றும் ஐஆர்சிடிசி ஆப் டவுன்லோடு செய்து வைத்துக் கொண்டால் போதும். நினைத்த நேரம் காரை புக் செய்தால், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கார் நம் முன்னே வந்து நிற்கிறது. கார் டிரைவரின் புகைப்படம், போன் நம்பர், கார் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது எவ்வளவு நேரத்தில் வரும் என்ற விபரம் முதற் கொண்டு ஆப்பிலேயே தெரிகிறது. நினைத்தால் கேன்சல் செய்து கொள்ளலாம். டிரைவர் பிஹேவியர் சரியில்லனா அதே ஆப்பிலேயே புகாரும் செய்து கொள்ளலாம்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment