சீனாவில் நோயாளியின் கண்ணில் இருந்து எடுக்கப்பட்ட 20 புழுக்கள்!

சீனாவில் நோயாளியின் கண்ணில் இருந்து எடுக்கப்பட்ட 20 புழுக்கள்!

சீனாவில் நோயாளியின் கண்ணில் இருந்து எடுக்கப்பட்ட 20 புழுக்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக சீனாவில், வான் என்ற ஒருவர் தனது கண்களில் ஏதோ ஒன்று நெளிந்து கொண்டே இருப்பது போல உணர்ந்துள்ளார். ஆனால், இது சோர்வின் நிமித்தம் ஏற்பட்டிருக்கக் கூடும் என நினைத்து அப்படியே விட்டு விட்டார். நாட்கள் செல்ல செல்ல கண்ணில் வலி அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, ஜியாங்சு மாஹனத்தின் சுஜோ நகரத்தில் உள்ள நகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் வலது கண்ணிமைக்கு அடியில் சிக்கியிருந்த சிறிய புழுக்களின் தொகுப்பை கண்டறிந்துள்ளார்.

இதனையடுத்து, மருத்துவர்கள் நோயாளியின் கண்ணிமையில் இருந்து புழுக்களை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்தனர். மொத்தம் 20 நூற்புழுக்கள் அவரது கண்களில் இருந்து எடுத்துள்ளனர். இந்த புழுக்கள் குறித்து, மருத்துவர்கள் கூறுகையில், இந்த லார்வாக்கள் புழுக்களாக உருவாக 15 முதல் 20 நாட்கள் ஆகும் என்றும், இந்த புழுக்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் ஒட்டிக் கொள்ளலாம் என்கின்றனர். இதனால், செல்லப்பிராணிகளின் சுகாதாரத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர் ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube