உக்ரைன் விமானத்தை 2 டோர் எம்-1ஏவுகணையால் தாக்கியதை உறுதி செய்த ஈரான் .!

உக்ரைன் விமானத்தை 2 டோர் எம்-1ஏவுகணையால் தாக்கியதை உறுதி செய்த ஈரான் .!

  •  கடந்த 8-ம் தேதி உக்ரைன் பயணிகள் விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலே கீழே விழுந்து நொறுங்கியதில் பயணம் செய்த 176 பயணிகளும்  இறந்தனர்.
  • இந்த உக்ரைன் விமானத்தை 2 டோர் எம்-1 ஏவுகணையால் தாக்கியது தெரியவந்து உள்ளது.

ஈரானின் டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி உக்ரைன்  பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது.அந்த விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலே கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் இந்த விமானத்தில் பயணம் செய்த 176 பயணிகளும் இறந்ததாக ஈரான் அறிவித்தது.

இந்த தாக்குதல் அமெரிக்க நடத்தியதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் உக்ரைன் விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டு வெடித்து சிதறும் காட்சியை இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் வெளியிட்டனர்.இதை தொடர்ந்து ஈரான் இராணுவம் அமெரிக்க போர் விமானம் என எண்ணி தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ஒப்புக்கொண்டனர்.

இந்த சம்பவத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி கூறினார்.இந்நிலையில் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக ஈரானின் சிவில் விமான போக்குவரத்து துறை முதல்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்து உள்ளது.

அதில் உக்ரைன் விமானத்தை 2 டோர் எம்-1 ஏவுகணையால் தாக்கியது தெரியவந்து உள்ளது.இந்த ஏவுகணைகள் குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடியது.

author avatar
murugan
Join our channel google news Youtube