#IPL2020:KKRvsMI-யாரு டாப்புனு!இன்னைக்கு பாத்துருவோம்!!

#IPL2020:KKRvsMI-யாரு டாப்புனு!இன்னைக்கு பாத்துருவோம்!!

இன்று நடைபெற உள்ள போட்டியில் கொல்கத்தா VS மும்பை அணிகள் பலபரீச்சை நடத்துகிறது. நடப்பு சாம்பியனான மும்பை அணி ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வி அடைந்தது. அதே அபுதாபி மைதானத்தில் மீண்டும் மும்பை களம் காணுவதால் இம்முறை ஆடுகளத்தை நன்கு புரிந்துகொண்டு ஆடுவதற்கு முயற்சி எடுக்கும். முதல் ஆட்டத்தில் சிறந்த தொடக்கம் கிடைத்தும் பின் வரிசை பேட்ஸ்மேன்களால் தடுமாறி விட்டனர். இருந்தபோதிலும் பந்து வீச்சு, பேட்டிங்க் இரண்டிலும் வலுவான அணியாகவே மும்பை அணி உள்ளது.இதனால் முதல் தோல்வியை துடைக்க இன்றைய போட்டியில் வெற்றி நோக்குடன் களமிரங்கும்  மும்பை என்று தெரிகிறது. இந்நிலையில் எதிர்புறம் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா அணி தரப்பில் அதிரடி வீரர் மோர்கன் இருக்கிறார்.இவர் எந்த சூழ்நிலையிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அசாத்திய திறன்படைத்த அதிரடி ஆட்டக்காரர்.அதே போல் ஆந்த்ரே ரஸ்செல், சுழலில் மிரட்டும் சுனில் நரின், குல்தீப் மேலும் ரூ.15½ கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், பிரசித் கிருஷ்ணா என நட்சத்திர வீரர்கள் நிறைய  பேர்  அணியில் இருப்பதால் நம்பிக்கையோடு மும்பையின் சவாலை எதிர்கொள்வார்கள். மேற்படி இவர்களின் ஆட்டம் ஒன்றாக சேர்ந்தால் ஆனால் அபாயகரமான அணியாக உருவெடுக்கும் கொல்கத்தா என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ரன்மழையை இன்று எதிர்பார்க்கலாம். சுப்மான் கில்லும், சுனில் நரினும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்குவார்கள் என்று நேற்று தெரிவித்தார் கேப்டன் தினேஷ் கார்த்திக், ‘சுப்மான் கில் தரம் வாய்ந்த வீரர். அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அணியின் எதிர்பார்ப்பையும் தாண்டி அவர் சிறப்பாக ஆடுவார் என்று நம்புகிறேன். பல்வேறு விதங்களில் பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டிருப்பது எங்களது பலமாகும். இந்தியாவைச் சேர்ந்த 4 வேகப்பந்து வீச்சாளர்களும் (ஷிவம் மாவி, கம்லேஷ் நாகர்கோட்டி, சந்தீப் வாரியர், பிரசித் கிருஷ்ணா) நல்ல நிலையில் உள்ளனர். ஆடும் லெவனில் யாரை சேர்ப்பது என்பதை முடிவு செய்ய மிகவும் கடினமாக இருக்கப்போகிறது’ என்று கார்த்திக் தெரிவித்தார்.இந்நிலையில் இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களின் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

Latest Posts

மாறி மாறி நாமினேட் செய்யும் ரியோ மற்றும் பாலாக்கு இடையில் என்ன தன பிரச்சனை!
பார்ப்பவர் மனதை கொள்ளையடிக்கும் பின்லாந்து வானத்தில் தோன்றிய வண்ணமய கட்சி!
மிரட்டலாக வெளியான 'சிம்பு46' பட பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்.!
இந்தியா புறப்பட்ட அமெரிக்க அமைச்சர்கள்.. நாளை டெல்லியில் பேச்சுவார்த்தை!
மகாராஷ்டிரா துணை முதல்வருக்கு கொரோனா..!
#BREAKING : 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது - உச்சநீதிமன்றம்  தீர்ப்பு
பென் ஸ்டோக்ஸ் சதத்தின் மூலம் புள்ளி பட்டியலில் 6 வது இடத்திற்கு சென்ற RR..!
உலகின் பல சாதனைகளையும் தகர்த்தெறிந்த SSC Tuatara.. இதுதான் புதிய அதிவேக கார்!
ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி!
ரூ.2.50 கோடி நகை கொள்ளையில் ஒருவர் கைது..!