ஒரு முறை அல்ல 5 முறை ஐபிஎல் கோப்பை! வீரராக ரோகித் சர்மாவின் சாதனை

ஒரு முறை அல்ல 5 முறை ஐபிஎல் கோப்பை! வீரராக ரோகித் சர்மாவின் சாதனை

மார்ச் மாதம் 23ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.லீக் சுற்றுகள் அனைத்தும் நடைபெற்று முடிந்தது.தகுதிச்சுற்று போட்டிகளில் மும்பை அணி முதல் தகுதிச்சுற்று போட்டியில் வெற்றிபெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2 வது தகுதிச்சசுற்று போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ்ஆகிய அணிகள் மோதியது.விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் மார்ச் மாதம் 23ம் தேதி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் நேற்று  இறுதிக்கட்டத்தை எட்டியது.நேற்று  இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது.இதில் பலம் வாய்ந்த அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது.இந்த போட்டி ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் கோப்பையை 4-வது முறையாக கைப்பற்றியது. மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் 4 முறை  கோப்பை கைப்பற்றிய முதல் கேப்டன் ஆவார் .இவரது தலைமையில் மும்பை அணி 2013 -ஆம் ஆண்டு,2015-ஆம் ஆண்டு,2017-ஆம் ஆண்டு,2019-ஆம் ஆண்டுகளில் கோப்பையை கைப்பற்றியுள்ளது.மேலும் ஒரு வீரராக 5 முறை இவர் இருந்த அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.அதில் நான்கு முறை மும்பை இந்தியன்ஸ் அணி,ஒரு முறை டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் இருந்த போதும் கோப்பையை  கைப்பற்றியது.ரோகித் 2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆண்டு வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.பின் 2011-ஆம் ஆண்டு மும்பை அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார்.பின் 2013-ஆம் ஆண்டு ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் ரோகித் கோப்பையை கைப்பற்றுவாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.ரோகித் அடுத்த வருடம் கோப்பையை கைப்பற்றுவாரா? இல்லையா?என்று உங்கள் கருத்தையும் பதிவிடுங்கள்….

 

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *