IPL தொடரால் மக்களின் மனநிலையை மாற்ற முடியும் – சஞ்சு சாம்சன்

IPL தொடரால் மக்களின் மனநிலையை மாற்ற முடியும் – சஞ்சு சாம்சன்

கொரோனா தொற்று பாதிப்பால் நாட்டு மக்களின் மனநிலையை ஐபிஎல் தொடரால் மாற்றமுடியும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், ஒரு பகுதியாக நாடு முழுவதும் 3 ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்த பொதுமுடக்கத்தால் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடர் போட்டி முதலில் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், கொரோனா தீவிரம் காரணமாக காலவரையின்றி ஒத்துவைக்கப்படுவதாக கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்தது. இதனால் மீண்டும் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சஞ்சீவ் சாம்சன், ஊரடங்கு காரணமாக மைதானத்தில் பயிற்சி எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது கவலையளிப்பதாகவும், இதனால் சகோதரின் மாடியில் வலையை கட்டி டென்னிஸ் பந்து மூலம் பேட்டிங் பயிற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார். 

மேலும், கொரோனா தொற்று பாதிப்பால் நாட்டு மக்களின் மனநிலையை ஐபிஎல் தொடரால் மாற்றமுடியும் என்று கூறியுள்ளார். இதையடுத்து மைதானங்கள் காலியாக உள்ள நிலையில், விளையாட்டு போட்டிகள் மீண்டும் நடைபெறும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, விளையாட்டு வீரர் என்ற முறையில் சொன்னால் முடிந்த வரை போட்டிகள் விரைவாக நடைபெற வேண்டும் என்பதே தனது விருப்பமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube