தோனியா? கோலியா? முதல் போட்டியில் மோதப் போகும் பெருஞ்சிங்கங்கள்

  • பன்னிரண்டாவது ஐபிஎல் தொடர் நாளை (23.மார்ச்) மாலை பிரமாண்டமாக துவங்க உள்ளது
  • முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதுகிறது

இந்தியா முன்னாள் கேப்டன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும் தற்போதைய கேப்டன் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் நாளை (23.மார்ச்) மாலை முதல் போட்டியில் மோதுகின்றன. இரண்டும் பெறும் அணிகள் என்பதால் இந்த இரண்டு சிங்கங்களில் எந்த சிங்கம் வெல்லப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் கடைசியாக பெங்களூர் அணி 2014ஆம் ஆண்டில் மட்டுமே சென்னை அணியை தோற்கடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தம் இதுவரை 23 ஆட்டங்களில் ஆடியுள்ள இரு அணிகளும் சென்னை அணி 15 ஆட்டங்களிலும், பெங்களூர் அணி 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்திற்கு முடிவு இல்லாமல் போயுள்ளது.

இரு அணிகள் இடையேயும் விளையாடிய 25 ஆட்டங்களில் மகேந்திர சிங் தோனி அதிகபட்சமாக 710 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.

author avatar
Srimahath

Leave a Comment