IPL 2018:மும்பை அணியின் பந்துவீச்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி!மும்பை அணி அபார பந்துவீச்சு!

மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ,ஐபிஎல் தொடரில் 23 ஆட்டத்தில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோதியது.

 

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்:ரோஹித்(கேப்டன்),சூர்யகுமார்,லீவிஸ் ,கிஷன்,பொல்லார்ட் ,ஹார்டிக் பாண்டியா,க்ருனால் பாண்டியா,மேக்லனகன்,மார்கண்டே,பூம்ரா,முஷ்டபிசூர் ரகுமான் ஆகியோர் இடம் பெற்றனர்.

சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான் ,மனிஷ் பண்டே,தீபக் ஹூடா,யூசுப் பதான்,சாஹிப் அல் ஹாசன்,சஹா,ரஷித் கான்,புவனேஸ்வர் குமார்,முகமது நபி,சித்தார்த் கவுல் ஆகியோர் இடம் பெற்றனர்.

இதையடுத்து களமிரங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது.சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிக பட்சமாக வில்லியம்ஸ்சன்,யூசுப் பதான் தலா 29  ரன்கள் அடித்தனர்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

மும்பை அணியின் பந்துவீச்சில்மேக்லனகன்,ஹர்டிக் பாண்டியா,மார்கண்டே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.119 ரன்கள் மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment