IPL 2018:மும்பை அணிக்கு ஓபனிங்கில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த அதிரடி வீரரின் கண்ணை பதம் பார்த்த பாண்டியா!கேள்விக்குறியானது அவரது அடுத்த ஐபிஎல் போட்டிகள்!

 நேற்றைய ஐபிஎல் போட்டியில்  ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில்  மும்பை விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் கண்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதிலிருந்து நூலிழையில் தப்பினார்.

பெங்களூரு அணி 214 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்ட திணறி கொண்டிருந்த போது ஆட்டத்தின் 13வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பந்தைப் பிடித்து அடித்த த்ரோ ஒன்று பயிற்சி ஆட்டத்துக்கான பிட்சில் பட்டு விக்கெட் கீப்பர் இஷான் கிஷனின் வலது கண்ணருகே தாக்கியது.

Image result for mumbai indians vs royal challengers bangalore 2018 ishan kishan eye damage

வலி தாங்காமல் மைதானத்தில் நிலைகுலைந்தார் இஷான் கிஷன்.அதாவது பும்ரா வீசிய பந்தை விராட் கோலி தரையோடு தரையாக புல் ஷாட் ஆடினார். பந்து மிட்விக்கெட் பீல்டர் முன்னால் விழுந்தது ஹர்திக் பாண்டியா அடித்த த்ரோ பிட்சில் பட்டு இஷான் கிஷன் வலது கண் அருகில் பயங்கரமாகத் தாக்க அவர் கீழே விழுந்து வலியால் துடித்தார்.

வலது கண் வீங்கிய நிலையில் மருத்துவக் குழு அவருக்கு முதலுதவி அளித்து பெவிலியன் அழைத்துச் சென்றனர், இதனையடுத்து ஆதித்யா தாரே விக்கெட் கீப்பிங் செய்தார்.

Image result for mumbai indians vs royal challengers bangalore 2018 ishan kishan eye damage

பந்து கொஞ்சம் மேலே கண்களைத் தாக்கியிருந்தால் ஒருமுறை தென் ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சருக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை இவருக்கு ஏற்பட்டிருக்கலாம், எப்படியோ தப்பினார், ஆனாலும் அவரது காயத்தின் தீவிரம் குறித்து இனிமேல்தான் தெரியவரும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment