IPL 2018:ஐபிஎல்லில் சுரேஸ்ரெய்னா,ரோகித்துக்கு டாடா சொல்லி டாப்க்கு போன விராட் கோலி!

டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் 11-வது ஐபிஎல் தொடரில் 45-வது லீக் போட்டியில் மோதின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா மற்றும் ஜேஜே ராய சொற்ப ரன்களில் சாஹல் பந்தில் போல்டாகி பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவரும் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். ரிஷப் பந்த் 34 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் எடுத்து முகமது சிராஜ் பந்தில் அவுட் ஆனார். ஷ்ரேயாஸ் 32 ரன்களில் வெளியே அபிஷேக் ஷர்மா களமிறங்கி ராயல் சேலஞ்சர்ஸ் பந்துவீச்சை விளாசி தள்ளினார். 19 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 46 ரன்கள் குவித்து கடைசிவரை அவுட் ஆகாமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பார்த்தீவ் படேல் மற்றும் மொய்தீன் அலி வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். அதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலியும் ஏபிடி வில்லியர்ஸும் டெல்லி பந்துவீச்சை நான்குபுறமும் சிதறடித்தனர். நேர்த்தியான ஷாட்டுகளை ஆடிய 40 பந்துகளை சந்தித்த கோலி 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 70 ரன்கள் குவித்தார்.

ஏபிடி வில்லியர்ஸ் கடைசி வரை நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 37 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். 19 ஓவர்களிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடத்தில் இருந்துவந்த சுரேஷ் ரெய்னாவை பின்னுக்கு தள்ளி கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த தொடரில் சுரேஷ் ரெய்னா பெரிதாக சோபிக்கவில்லை. இதுவரை இந்த தொடரில் 313 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் கோலி 466 ரன்களை குவித்துள்ளார்.

160 போட்டிகளில் ஆடியுள்ள விராட் கோலி, 4 சதங்கள் மற்றும் 34 அரைசதங்களுடன் 4884 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். 171 போட்டிகளில் 4853 ரன்கள் குவித்துள்ள சுரேஷ் ரெய்னா இரண்டாமிடத்திலும் 4474 ரன்களுடன் ரோஹித் சர்மா மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment