IPL 2018:இரு முறை சாம்பியன்…!தினேஷ் கார்த்திக் பெஸ்டா?கம்பீர் பெஸ்டா?கவுதம் இல்லாமல் கோப்பையை வெல்லுமா?

கவுதம் காம்பீர் தலைமையில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி இரு முறை கோப்பையை வென்றிருந்தது.

வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த அவர், இந்த சீசனில் தனது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வழிநடத்த உள்ளார். இதனால் கொல்கத்தா அணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி 20 தொடரின் இறுதி ஆட்டத்தில் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்ததுடன் உலக கிரிக்கெட் அரங்கின் பார்வையை தன் மீது குவியச் செய்தார்.

இதன் வாயிலாகவே 32 வயதான தினேஷ் கார்த்திக்குக்கு கொல்கத்தா அணியை வழிநடத்தும் பொறுப்பு தேடிவந்தது. தினேஷ் கார்த்திக் கூறும்போது, “எதிர்பார்ப்புகள் குறித்து நான் அறிந்துள்ளேன். நெருக்கடி இருப்பது உண்மைதான். ஒரு கேப்டனாக அணி பிளே ஆப் வரை முன்னேற வேண்டுமென்று என்னிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்போது இவ்வகை அழுத்தத்தை நான் கையாளும் நம்பிக்கையில்தான் இருக்கிறேன். வீரர்களிடமிருந்து சிறந்தவற்றை என்னால் வெளிக்கொண்டு வர முடியும்” என்றார்.

உள்ளூர் அளவிலான போட்டிகளில் மாநில அணிக்கு தினேஷ் கார்த்திக் ஏற்கெனவே தலைமை தாங்கி உள்ளதால், கேப்டன் பதவியில் ஏற்படும் நெருக்கடியை அவர் எளிதாகவே கையாளக்கூடும். மேலும் பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் களமிறங்கி பங்களிப்பு செய்யும் திறனையும் கொண்டிருப்பதால் காம்பீரை போன்று தினேஷ் கார்த்திக் அணியை திறம்பட வழிநடத்துவார் என்றே கருதப்படுகிறது. அவருக்கு உறுதுணையாக துணை கேப்டன் ராபின் உத்தப்பா உள்ளார்.

ரூ.9.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வலது காலின் உட்புறம் எலும்பில் ஏற்பட்டுள்ள அழுத்தம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். இது கொல்கத்தா அணிக்கு சிறிய அளவிலான பின்னடைவாகவே கருதப்படுகிறது. எனினும் அவருக்குப் பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இங்கிலாந்தின் டாம் குர்ரன் பந்து வீச்சுடன், பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்யக்கூடியவராக உள்ளார்.

வேகப்பந்து வீச்சில் யு-19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த கமலேஷ் நாகர்கோட்டி, ஷிவம் மாவி ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இவர்களுடன் அனுபவம் வாய்ந்த மிட்செல் ஜான்சன், வினய் குமார், மேற்கிந்தியத் தீவுகளின் ஜவோன் சீயர்லெஸ் ஆகியோரும் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் மாய வித்தைகளை கையாளும் சுனில் நரேனுடன், குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

பேட்டிங்கில் வெளுத்து வாங்க கிறிஸ் லின், ஆந்த்ரே ரஸல், கேமரான் டெல்போர்ட் ஆகியோர் காத்திருக்கின்றனர். இவர்களுடன் இளம் வீரரான சுப்மான் கில், நிதிஷ் ரானா, ரிங்கு சிங், அபூர்வ் வான்கடே, இஷாங்க் ஜக்கி ஆகியோரும் கவனத்தை ஈர்க்க தயாராக உள்ளனர். கடந்த சீசனில் கொல்கத்தா அணி தகுதி சுற்று 2-ல் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருந்தது. இம்முறை பிளே ஆப் சுற்றில் கால்பதிப்பதை முதல் இலக்காக கொண்டுள்ளது.

Image result for gambhir champion i[pl

அணி விவரம்

தினேஷ் கார்த்திக் (கேப்டன்), கிறிஸ் லின், சுனில் நரேன், ஆந்த்ரே ரஸல், ராபின் உத்தப்பா, குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா, நிதிஷ் ரானா, கமலேஷ் நாகர்கோட்டி, ஷிவம் மாவி, மிட்செல் ஜான்சன், சுப்மான் கில், வினய் குமார், ரிங்கு சிங், கேமரான் டெல்போர்ட், ஜவோன் சீயர்லெஸ், அபூர்வ் வான்கடே, இஷாங் ஜக்கி, டாம் குர்ரன்.

மோதல் விவரம்

ஏப்.8 பெங்களூரு, ஏப்.10 சென்னை, ஏப்.14 ஹைதராபாத், ஏப்.16 டெல்லி, ஏப்.18 ராஜஸ்தான், ஏப்.21 பஞ்சாப், ஏப்.27 டெல்லி, ஏப்.29 பெங்களூரு, மே 3 சென்னை, மே 6 மும்பை, மே 9 மும்பை, மே 12 பஞ்சாப், மே 15 ராஜஸ்தான், மே 19 ஹைதராபாத்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment