சிதம்பரம் ஜாமீன் மனு - நாளை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

சிதம்பரம் ஜாமீன் மனு - நாளை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தற்போது அமலாக்கத்துறை வழக்கில் திகார் சிறையில்  உள்ளார்.முதலில் இவரை சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.பின்னர் சிபிஐ வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக  ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.அந்த மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் இன்றைய விசாரணையில் சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை நாளை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.  

Latest Posts

இடுக்கியில் வயல்பகுதியில் சிக்கிய 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு!
மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் நாளை பிரதமர் உரை..!
#IPL2020: பந்து வீச்சில் மிரட்டிய ஹைதராபாத்.. 127 ரன்கள் இலக்கு வைத்த பஞ்சாப்..!
#BREAKING: மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்..!
ஐபிஎல் தொடரில் புதிய மைக்கல்லை எட்டிய சந்தீப்!
பிளிப்கார்ட் விற்பனை.. அக்.,28 வரை அதிரடி ஆஃபர்கள்!
#IPL2020: டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது!
#IPL2020: டக் அவுட் ஆன ரஹானே.. 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி!
அட வெங்காயத்திற்கு வந்த வாழ்வா? புதுமணத்தம்பதிகளுக்கு வெங்காயத்தை பரிசளித்த தோழிகள்!
வனப்பகுதியில் சென்ற காரை கோபத்துடன் விரட்டிய ஒற்றை யானை..!