ரூ.22.28 கோடி சொத்துகள் முடக்கம் !புதிய செய்தி அல்ல, 6 மாதங்களுக்கு முன்பே பிறப்பித்த உத்தரவு!கார்த்தி சிதம்பரம் தரப்பு விளக்கம்

ரூ.22.28 கோடி சொத்துகள் முடக்கம் !புதிய செய்தி அல்ல, 6 மாதங்களுக்கு முன்பே பிறப்பித்த உத்தரவு!கார்த்தி சிதம்பரம் தரப்பு விளக்கம்

எனது சொத்துகள் முடக்கப்பட்டது புதிய செய்தி அல்ல என்று கார்த்தி சிதம்பரம் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்று பெற்றுத் தருவதாக சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

அதேபோல் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில்  காங்கிரஸ் சார்பில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.

நேற்று  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான  ரூ.22.28 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை.அதாவது வழக்கில் தொடர்புடைய 3 நிறுவனங்களில் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

Image result for karthi chidambaram INX

சிவகங்கை மக்களவைத் தொகுதியில்  கார்த்தி சிதம்பரம் போட்டியிடும் நிலையில் அமலாக்கத்துறை அவரது சொத்துக்களை முடக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் இன்று கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் அருண் நடராஜன் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில்,கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கப்பட்டது புதிய செய்தி அல்ல என்றும்  6 மாதங்களுக்கு முன்பே பிறப்பித்த உத்தரவு என்று கூறியுள்ளார்.மேலும் அமலாக்கத்துறை பழைய உத்தரவை தேர்தல் நேரத்தில் பயன்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *