ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரம் தொடர்ந்த மனு தள்ளுபடி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ்

By Fahad | Published: Mar 28 2020 05:40 PM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்  சிபிஐ காவலில் திகார் சிறையில் உள்ளார்.ஆனால் அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் விசாரணை நடத்த தீவிரம் காட்டி வருகிறது.இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி சிதம்பரம் தரப்பில் மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில்,ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில்  அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.அதில் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.விசாரணையில் சிதம்பரம் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.