பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக்காக புதிய திட்டம் அறிமுகம்.!

  • சென்னை மாநகர காவல்துறை ஏற்கனவே 35 மகளிர் காவல் நிலையங்களுக்கு அம்மா ரோந்து வாகனங்கள் வழங்கி,காவலன் என்ற செயலியையும் வெளியிட்டது.
  • தற்போது சென்னையில் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு வசதியாக வாட்ஸ் அப் எண் மற்றும் முகநூல், மின்னஞ்சல் முகவரிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.

சமீப காலமாக பாலியல் தொல்லை, வழிப்பறி, கொள்ளை மற்றும் கொலை போன்றவைகள் நடந்து வருவதால், அதுபோன்று சம்பவங்கள் குறைக்கும் அளவுக்கும், மகளிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துவரும் மாநகர காவல்துறை ஏற்கனவே 35 மகளிர் காவல் நிலையங்களுக்கு அம்மா ரோந்து வாகனங்கள் வழங்கி ரோந்து பணியில் ஈடுபடுவதுடன், காவலன் என்ற செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் என உணர்ந்தால் 7530001100 என்ற வாட்ஸ் அப் எண், மற்றும் http://www.facbook.com/chennai.police என்ற முகநூல் பக்கத்திலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என்றும், அவர்களது ரகசியம் காக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்