ஜம்முவில் மீண்டும் 2G இணைய சேவை தொடக்கம்

ஜம்முவில் இன்று முதல்  2ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அம்மாநிலத்திற்கு வழங்கும் சிறப்பு அந்தஸ்து  370-வதை  ரத்து செய்வதாகவும் ,காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று அறிவித்தது.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்பு அங்கு ஊரடங்கு உத்தரவு பிரிப்பிக்கப்பட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  தொலைபேசி மற்றும் இணைய சேவையானது முற்றிலுமாக முடக்கப்பட்டது .

மேலும்  டைம்ஸ்  நாளிதழின் எடிட்டர் அனுராதா பாசின் காஷ்மீரில் கருத்துரிமை முடக்கப்பட்டுள்ளதாக வழக்கு ஒன்று தொடர்ந்தார் பத்திரிக்கையாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு நடக்கும் செய்திகளை சேகரிக்க முடியவில்லை என்று மனுதாக்கல் செய்தார் .இந்த மனு தொடர்பான விசாரணையில் மத்திய அரசின் வழக்கறிஞர் வேணுகோபால் காஷ்மீரில் கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இதனிடையில் இன்று ஜம்முவில்  2ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது .ஜம்மு ,சாம்பா ,கத்வா ,உதம்பூர் ,ரியாசி பகுதிகளுக்கு மீண்டும் 2ஜி இணைய சேவையானது வழங்கப்பட்டுள்ளது .

author avatar
Dinasuvadu desk