பல்புகள் வழியாக இன்டர்நெட்(Life Fi) வசதி : பிலிப்ஸ் நிறுவனம் சாதனை..!!

பிலிப்ஸ் லைட்டிங், இப்போது லைட் ஃபீடிலிட்டி (லைஃபை ஃபி) (Life Fi)என்றழைக்கப்படுமொரு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இது உயர் தரமான எல்.ஈ.டி விளக்குகளின் ஒளி அலைகளின் வழியாக பிராட்பேண்ட் இணைய இணைப்பை வழங்குமொரு தொழில்நுட்பமாகும்.

இந்த முயற்சியின் வாயிலாக, ஒரு முழுமையான மின் ஒளி அலகுகளை (லுமினரீஸ்) தயாரிக்குமொரு நிறுவனமான பிலிப்ஸ் – லைஃபை செயல்படுத்தப்பட்ட ஒளி வீசுகின்ற விளக்குகளை வழங்கும் உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

வைஃபையை போன்றே லைஃபை (LiFi) ஆனதும் இரு வழி மற்றும் அதிவேக வயர்லெஸ் தொழில்நுட்பமாகும். ஆனால் டேட்டா பரிமாற்றத்திற்கு, ரேடியோ அலைகளுக்கு பதிலாக ஒளி அலைகளைப் பயன்படுத்துகிறது.

பிலிப்ஸ் நிறுவனத்தின்படி, இந்த லைஃபை தொழில்நுட்பமானது, ஏற்கனவே அதன் அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இவ்வகை விளக்குகள் ஆனது ஒளியின் தரத்தில் எந்தவிதமான சமரசமின்றி, சுமார் 30எம்பிபிஎஸ் வேகத்தில்லான பிராட்பேண்ட் இணைப்பையும் வழங்கிவருகிறது.

30எம்பிபிஎஸ் அளவிலான வேகமென்பது ஒரு பெரிய வேகமாக இல்லாவிட்டாலும் கூட, இதுவே பெரும்பாலான இணையம் சார்ந்த வேலைகளை முடிக்க நிச்சயம் போதுமானதாக இருக்கும். அலுவலகங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த லைஃபை தொழில்நுட்பமானது, எதிர்கால வாடிக்கையாளர்களுக்கான சாத்தியமான தொழில்நுட்பம் ஆகும்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment