பயனாளர்களுக்கு இனிய செய்தி SlowMo, Echo, Duo என மூன்று புதிய அப்டேட்டுகளை கொடுத்த இன்ஸ்டாகிராம்.

சமூக வலைதளங்களில் இளைஞர்கள், பெண்கள், மற்றும் பல பிரபலங்களை கவர்ந்த

By balakaliyamoorthy | Published: Jan 13, 2020 08:25 PM

  • சமூக வலைதளங்களில் இளைஞர்கள், பெண்கள், மற்றும் பல பிரபலங்களை கவர்ந்த டாப் தளங்களுள் ஒன்றாக இன்ஸ்டாகிராம் உள்ளது.
  • தற்போது இன்ஸ்டாகிராமில் புதிய மூன்று அம்சங்கள் SlowMo, Echo, Duo ஆகியவை பூமராங் ஆப்ஷனின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் இளைஞர்கள், பெண்கள், மற்றும் பல பிரபலங்களை கவர்ந்த டாப் தளங்களுள் ஒன்றாக இன்ஸ்டாகிராம் உள்ளது. ஸ்நாப்சாட், டிக் டாக் ஆகிய சமூக வலைதளங்களுக்குப் போட்டியாக முன்னணி இடத்தை நோக்கி இன்ஸ்டாகிராம் முன்னேறி வருகிறது. இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான அம்சமாக இருப்பது பூமராங் ஆப்ஷன். பூமராங் என்பது ஒரு காட்சியை ஆறு முறை ஆறு விநாடிகளுக்கு காட்டும் ஒரு வகை ஆப்ஷன் ஆகும். இந்த பூமராங் ஆப்ஷனின் கீழ்தான் புதிதாக மூன்று பில்டர்கள் மற்றும் எஃபெக்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது SlowMo, Echo, Duo ஆகிய மூன்று அப்டேட்கள் பூமராங் ஆப்ஷனின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. SlowMo என்பது பூமராங் வீடியோவை இன்னும் மெதுவாகக் காட்டும். Echo என்பது உங்கள் காட்சியை இரட்டிப்பு விஷன் முறையில் காட்டும். ஒரு வகையாக ப்ளர் செய்யப்பட்டது போன்றதொரு தோற்றம் இந்த ஆப்ஷனின் கீழ் கிடைக்கும். மூன்றாவதாக, Duo என்ற ஆப்ஷன் டிஜிட்டல் முறையில் உங்கள் க்ளிப்பிங்கை வேகவேகமாகக் காட்டும் ஒரு அம்சம் ஆகும்.
Step2: Place in ads Display sections

unicc