இனிமேல் நீங்க ஹெல்மெட் போடவில்லையென்றால் என்ன நடக்கும் தெரியுமா…..?

தமிழகத்தில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, போலீசார் தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டுள்ளனர்.
ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிந்து அபராதம் விதித்தனர். ஆயினும் மக்கள் இதை முழுமையாக கடைபிடிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டினால்  அவர்களுக்கு  அபராதம் விதிப்பதை விடுத்து, 20 அல்லது 25  பேரை ஒன்றாக சேர்த்து சப்-டிவிசன்களில் வைத்து 15 நிமிட குறும்படத்தை திரையிட்டு காட்ட வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment