தளபதி விஜயின் புதிய படம் குறித்த தகவல்!

  • தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.
  • தளபதி 65 படம் குறித்து வெளியான தகவல். 

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், விஜய் சேதுபதி, சந்தனு மற்றும் மாளவிகா மோகன் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இதனையடுத்து, விஜய்யின் 65வது படத்தை சுதா கொங்காரா இயக்க இருப்பதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.