INDW VS AUSW: இந்தியாவை தொம்சம் செய்த ஆஸ்திரேலிய அணி.!

  • இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையே முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 
  • இந்திய மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் கான்பெரா மைதானத்தில் இன்று நடைபெற்ற 3-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையே முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் கான்பெரா மைதானத்தில் இன்று 3-வது போட்டியில் மோதின. பின்னர் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 35 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 104 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பெர்ரி 49 ரன்களும், கார்ட்னர் 22 ரன்களும் குவித்து அணிக்கு வெற்றி தேடி தந்தனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி வீரர் எல்லிஸ் பெர்ரி 4 விக்கெட்டும் மற்றும் டெய்லா விளாமின்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்