மோசமான பிரதமர் மன்மோகன் சிங்!இந்திரா காந்தி மகன் ராகுல் காந்தி!கன்பியூஸ் ஆன திமுக கூட்டணி கட்சி தலைவர்

இந்திரா காந்தி  மகன் ராகுல் காந்தி என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா

By venu | Published: Apr 07, 2019 06:29 PM

இந்திரா காந்தி  மகன் ராகுல் காந்தி என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்  மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.அதேபோல்  தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரச்சாரம் செய்யும் அதேவேளையில் முக்கிய தலைவர் சிலர் வாய் உளறி மாற்றி பேசி விடுகிறார்கள்.இப்படி உளறுவது  தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. Image result for ஜவஹிருல்லா இந்நிலையில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி உள்ளது.இதனால் அந்த கட்சி சார்பாக அதன் தலைவர் ஜவாஹிருல்லா சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதரித்து பேசினார் .அப்போது அவர் பேசுகையில்,இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் ராகுல் காந்தி என்று மாற்றி பேசினார்.அதாவது இந்திரா காந்தி மகன் ராஜீவ் காந்தி என்று கூறுவதற்கு பதிலாக மாற்றி பேசினார்.அது மட்டும் அல்லாமல் இதுவரை இருந்த பிரதமர்களில் மிகவும் மோசமான பிரதமர் மன்மோகன் சிங் என்று பேசினார்.நரேந்திர மோடி என்று குறிப்பிடுவதற்கு மன்மோகன் சிங் என்று அவர் பேசியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது.    
Step2: Place in ads Display sections

unicc