இந்தியாவின் எச்சரிக்கை! அலட்சியம் காட்டிய இலங்கை அரசு! வேதனை தெரிவித்த இலங்கை பிரதமர்

இலங்கையில், நேற்று மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த

By leena | Published: Apr 23, 2019 08:40 AM

இலங்கையில், நேற்று மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்துள்ளது. இந்நிலையில், ஏப்ரல், 4-ம் தேதி, இந்திய உளவுத் துறை கண்டுபிடித்து இலங்கையை எச்சரித்தது. இந்திய உளவுத் துறை வழங்கிய எச்சரிக்கை தகவலில் கொழும்பில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடங்கள் இடம்பெற்றிருந்தன. இது குறித்து பேசிய, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங் அவர்கள்,கொழும்பில் தீவிரவாதிகள் கைவரிசை காட்ட இருப்பதாக இந்தியா கூறியிருந்தும் நாங்கள் கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் இருந்துவிட்டோம் என்று கூறியுள்ளார். மேலும், கிடைக்கப் பெற்ற போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டோம். இத்தகைய உளவுத் துறையின் எச்சரிக்கையை அசட்டை செய்யாமல் இருந்திருந்தால் பெரும் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் என்றும் பிரதமர் ரணில் வேதனை தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc