பல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனம் அல்ல-ராகுல் காந்தி

பல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனம் அல்ல என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தி தினம் கொண்டாடப்பட்டதையொட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு இந்தி பேசாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இதற்கு கருத்து தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், இந்தியாவில் தமிழ்,கன்னடம் , இந்தி,குஜராத்தி , மராத்தி, ஆங்கிலம், உருது என பல மொழிகள் இருப்பதாக குறிப்பிட்டார் மேலும் பன்மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனம் அல்ல  என்றும் தெரிவித்துள்ளார்.