இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்

உலக அளவில் பொருளாதார வளர்ச்சி  மந்தமாகத்தான்  உள்ளது எனவும் அதுமட்டுமில்லாமல் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடு பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது என்று  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார் . சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியானது  3.2 சதவீதம் குறைந்துள்ளதாகவும். உலகில் உள்ள  மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளதாக என்று  தெரிவித்தார்.

பொருளாதார சிக்கல்களை களைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும்  பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துணிச்சலான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது அந்த நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்தார்.

தொழில் தொடங்குவதற்கான சூழல் கடுமையான முறைகளிலிருந்து எளிமையாகாப் பட்டுள்ளது.சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தை முறையாக செயல்படுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் எவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் .

 

author avatar
Dinasuvadu desk