தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி..!

தென்னாபிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டிகளில்

By murugan | Published: Oct 12, 2019 05:39 PM

தென்னாபிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.முதலில்  தென் ஆப்பிரிக்க அணி இறங்கியது.அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இது தொடக்க வீரர் லாரா வால்வார்ட் 69 ரன்கள் எடுத்தார். பின்னர் அனைவருக்கும் சிறப்பாக விளையாடினர்.தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 247 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து 248 ரன்கள் இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் சரியாக விளையாடவில்லை.பிரியா புனியா 20 , ஜெமிமா 18 ரன்களுடன் வெளியேறினர்.  பின்னர் இறங்கிய புனம் ரவுத் , மிதாலி ராஜ் இருவரும் கூட்டணி சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். பின்னர் இறுதியாக இந்திய அணி  48 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 248 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதில் அதிகபட்சமாக புனம் ரவுத் 65 , மிதாலி ராஜ் 66 ரன்கள் அடித்தனர். இந்த இரண்டு அணிகளுக்கு மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன.அதில் இந்திய மகளிர் அணி முதல் இரண்டு போட்டிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc