இந்திய தேர்வு குழுவின் கவனத்தை ஈர்த்துள்ள புத்தம் புதிய விக்கெட் கீப்பர் !

இந்திய தேர்வு குழுவின் கவனத்தை ஈர்த்துள்ள புத்தம் புதிய விக்கெட் கீப்பர் !

2019 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடித்திருந்தது. ஆனால் அரையிறுதியில் இந்திய அணி வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் உலகக்கோப்பையை விட்டு வெளியேறினர்.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்காக அணி தேர்வு 17,18  நடக்கிருந்ததை 21ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த தொடரில் கேப்டன் விராத் கோலி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு டெஸ்ட போட்டிக்காக  ஓய்வளிக்கப்படுகிறது. ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். இந்நிலையில் தோனி கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக 2 மாதம் ஓய்வு பெற்று தனது இரணுவ பணியாற்ற சென்றுள்ளார். இதனால் இந்திய விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்ய கிரிக்கெட் குழு குழப்பத்தில் இருந்தது. தோனிக்கு பிறகு பண்ட் அல்லது சஹா இடம்பிடிக்க அதிக வாய்ப்புகள் இருந்தது.

ஆனால் தற்போது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய தேர்வு குழுவின் கவனத்தை தன் மீது ஈர்த்துள்ளார் ஆந்திர பிரதேச அணிக்காக விளையாடி வரும் கே.எஸ் பரத். இவர் கடந்த 1 வாரத்தில் 10 போட்டிகளில் விளையாடி 286 ரன்கள் குவித்துள்ளார். இவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய ஏ அணியின் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படலாம்.

author avatar
Vidhusan
Join our channel google news Youtube