அர்ஜூனா விருது பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா !

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீரக்கனையை பெருமைப்படுத்தும் விதமாக மத்திய அரசு அர்ஜூனா விருதை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு இந்திய பெண்கள் அணியின் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

அர்ஜூனா விருதுக்கான பெயர் பட்டியலை பிசிசிஐ அனுப்பியது. அதில் வேகப்பந்து வீச்சாளர் ஷமி , பும்ரா,ஆல் ரவுண்டர் ஜடேஜா மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உட்பட 19  விளையாடு வீரர்களின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அதில் துப்பாக்கி சுடும் வீரர் அஞ்சும் மோட்கில் ,  ஹாக்கி வீரர் ஜிங்கென்சனா சிங் , கால்பந்து வீரர் குர்பிரீத் சிங் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

உலககோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும் தன்னுடைய திறமையான ஆட்டத்தால் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan